ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு வில்லனாவாரா கட்டப்பா?

|

சென்னை: ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது, இந்தப் படத்திற்கு ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்கிறார் என்று 2 தினங்களுக்கு முன்பு தான் அரைகுறையாக முடிவானது.

தற்போது படத்தில் வில்லனாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது, அனேகமாக கட்டப்பா சத்யராஜ் நடிக்கலாம் என்று தகவல்கள் அடிபடுகின்றன.

Rajini's Next Movie Sathyaraj Play as a Villain?

இந்தப் படத்தில் முதலில் நடிகர் பிரகாஷ் ராஜை நடிக்க வைக்க திட்டமிட்டு இயக்குநர் ரஞ்சித் அவரை அணுக, தற்போது பிஸியாக இருக்கும் பிரகாஷ் ராஜால் தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க முடியவில்லையாம்.

எனவே சத்யராஜை அணுக இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன, ஆனால் சத்யராஜ் அந்த வாய்ப்பை ஏற்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இதற்கு முன்பு சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷங்கர் சத்யராஜை கேட்டபோது அவர் மறுத்து விட்டார்.

இந்த முறையாவது ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சத்யராஜ் ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்பது..அந்த ஆண்டவன் கைகளில் எல்லாம் இல்லை சத்யராஜ் கைகளில் தான் உள்ளது.

 

Post a Comment