சென்னை: பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு சொந்தக்காரர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தை இயக்கும் வேலைகளில் மிகவும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
பாகுபலியின் 2 ம் பாகம் அடுத்த வருடத்தில் திரைக்கு வரவிருக்கிறது, இந்த படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். மகேஷ்பாபுவின் படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜீத்தை வைத்து இயக்கும் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் எடுக்க இருக்கிறாராம் ராஜமௌலி, தமிழில் அஜீத்தும் தெலுங்கு மொழியில் அல்லு அர்ஜுனும் நடிக்க இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.
மேற்சொன்ன தகவல்களை இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கே.வி. விஜயேந்திரன் ஒரு பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார், தென்னிந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த செய்தி அஜீத்தின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று மேலும் இந்தத் தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார் கே.வி.விஜயேந்திரன்.
அனேகமாக 2016 ம் ஆண்டின் இறுதியில் இந்தப் படம் திரைக்கு வரலாம் என்று தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறார் ராஜமௌலியின் தந்தையும் பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் படங்களின் கதை ஆசிரியருமான கே.வி.விஜயேந்திரன்.
தந்தை சொல்லை தனயன் தட்ட வாய்ப்பில்லை பார்க்கலாம்...
Post a Comment