ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நாகா படத்தில் நாயகியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவைக் காதலித்து மணந்த ஜோதிகா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 36 வயதினிலே படத்தில் நாயகியாக நடித்தார். அந்தப் படத்தை சூர்யாவே தயாரித்தார். படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் புதிய படங்களில் நடிப்பைத் தொடர்வேன் என்று ஜோதிகா கூறியிருந்தார்.
இப்போது காஞ்சனா 2 படத்துக்குப் பிறகு நாகா என்ற பெயரில் பேய்ப் படம் ஒன்றை இயக்குகிறார் லாரன்ஸ். இந்தப் படம் பாம்பு சென்டிமென்டை அடிப்படையாக வைத்து உருவாகிறது. படத்தின் கதையை ஜோதிகாவிடம் லாரன்ஸ் கூறியதாகவும், கதை பிடித்ததால் நடிக்க ஜோதிகா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. நாகா படத்தை மூன்று பாகங்களாக எடுக்கும் முயற்சியில் உள்ளார் ராகவா லாரன்ஸ்.
Post a Comment