அஞ்சுக்கு ஒண்ணு படத்தை இயக்கியுள்ள ஆர்வியார், அந்தப் படத்தில் நடித்த 5 ஹீரோக்களையும் குளிக்கவே அனுமதிக்கவில்லையாம். இதனை மேடையில் தெரிவித்தனர் படத்தின் ஹீரோக்களான ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த் ஆகியோர்.
அஞ்சுக்கு ஒண்ணு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்டு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.
இதில் தயாரிப்பாளர் எவர்கிரீன் எஸ்.சண்முகம், இயக்குநர் ஆர்வியார், இசையமைப்பாளர் சாகித்யா, நாயகிகள், உமாஸ்ரீ, மேக்னா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கலந்துகொண்டனர். கட்டடத் தொழிலாளர்கள் பற்றிய கதையாம் இது.
தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில், "எனக்கு இயக்குநர் சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடியே படத்தை முடித்து கொடுத்துள்ளார்.இந்த படம் நன்றாக வந்துள்ளது,பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளது அதேபோல் படமும் சிறப்பாக வந்துள்ளது என் போன்ற புதுமுக தயாரிப்பளருக்கு ஊடக நண்பர்களின் ஆதரவு வேண்டும்," என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய அனைத்து கதையின் நாயகர்கள் 5 பேரும், "இயக்குநர் எங்களை 45 நாள் குளிக்க விடாமலும்,முக அலங்காரம் செய்ய விடாமலும் செய்து எங்களை கட்டிட தொழிலாளர்களாகவே மாற்றிவிட்டார்," என்றனர்.
கடைசியாக பேசிய இயக்குநர் ஆர்வியார், "நான் தயாரிப்பளருக்கு சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடி படம் முடித்து கொடுத்துள்ளேன். அதனால் தான் அவர் எனக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். அந்த படத்தின் தலைப்பு அழுக்கு என்று பெயர் வைத்துள்ளேன்," என்றார்.
5 ஹீரோக்களையும் குளிக்கவிடாத பாதிப்பு போலிருக்கிறது!
Post a Comment