மம்முட்டியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

|

மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் இணைகிறார் நயன்தாரா.

தமிழில் நீண்ட நாட்களாக நம்பர் ஒன் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா, சொந்த மொழியான மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

Nayanthara pairs up with Mammootty again

இங்கு கோடிகளில் சம்பளம் அவர், மலையாளத்தில் மட்டும் சில லட்சங்கள் பெற்றுக் கொண்டு நடிக்கிறார். அங்கு ஹீரோக்களின் அதிகபட்ச சம்பளமே ஒரு கோடிதான்!

தமிழ், தெலுங்கில் பிஸியாக இருந்தபோது, மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘பாஸ்கர் தி ராஸ்கல்' என்னும் படத்தில் நடித்தார் நயன்தாரா. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. நல்ல வரவேற்பும் வசூலும் இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தை ஏகே சாஜன் இயக்குகிறார்.

Nayanthara pairs up with Mammootty again

நயன்தாரா நடித்துள்ள ‘மாயா', ‘நானும் ரௌடிதான்', ‘தனி ஒருவன்', ‘இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இப்போது கார்த்தியுடன் இணைந்து ‘காஸ்மோரா' படத்திலும், ஜீவாவுடன் இணைந்து ‘திருநாள்' படத்திலும் நடித்து வருகிறார்.

 

Post a Comment