சென்னை: கடந்த வாரம் மகேஷ்பாபு நடிப்பில் நேரடியாக தமிழில் வெளியாகிய செல்வந்தன் ( தெலுங்கில் ஸ்ரீமந்துடு) படத்தின் திரைக்கதை விஜயின் நடிப்பில் வெளியாகிய கத்தி படத்தைப் போன்று உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து உள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்து கடந்த வருடம் தீபாவளியன்று வெளியான திரைப்படம் கத்தி, குளிர்பான கம்பெனி ஒன்றை கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும். அந்த அராஜகத்தை விஜய் போராடித் தடுப்பார், இதுதான் படத்தின் கதை,திரைக்கதை, வசனம் எல்லாமே.
தற்போது மகேஷ்பாபு நடித்து வெளிவந்திருக்கும் செல்வந்தன் திரைப்படம் கத்தி படக்கதை போன்றே உள்ளதாக சினிமா உலகில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது கத்தி பாணியில் விவசாய நிலங்கள், தண்ணீர்ப் பிரச்சினை, தன்னலம் கருதாத ஹீரோ இடையில் குளிர்பான பிரச்சினை என்று செல்வந்தன் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.
இதெல்லாம் வழக்கமாக நடப்பது தானே என்று சொல்கிறீர்களா இந்த இடத்தில் ஒரு பிரச்சினை உள்ளது, அதாவது கத்தி படத்தின் தெலுங்கு உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கி வைத்துள்ளது.
தற்போது செல்வந்தன் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ஸ்ரீமந்துடு என்ற பெயரில் வெளியாகி இருப்பதால் கத்தி படத்தை ரீமேக்கும் போது தகுந்த வரவேற்பு கிடைக்காத ஒரு நிலை தெலுங்கில் ஏற்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு சோகம் என்னவென்றால் முதலில் கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க மகேஷ்பாபுவை அணுகியபோது ரீமேக் படங்களில் தான் நடிப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.
ரீமேக் படத்தில நடிக்க மாட்டீங்க ஆனா அதே மாதிரி கதையில நடிப்பீங்க...நல்ல கொள்கை
Post a Comment