என் ஒவ்வொரு படத்தின் இசையையும் ரஜினி கேட்டு பாராட்டுவார். அவர்தான் எனக்கு காட்ஃபாதர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறினார்.
தனுஷ் நடித்த ‘3' படத்துக்கு இசை அமைத்து தமிழ் திரை உலகின் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகியுள்ளார்.
விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைத்தவர், இப்போது அஜீத் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா வரிசையில் அனிருத்தும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து அனிருத் கூறுகையில், "நான் அஜீத் ரசிகன். அவருடைய படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டருக்கு சென்று விடுவேன். விசில் அடித்து, காகிதங்களை வீசி அமர்க்களப்படுத்துவேன். இப்போது அவரது படத்துக்கே இசை அமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது,' என்றார்.
ரஜினி பற்றி குறிப்பிடுகையில், "நான் அவருக்கு உறவு முறை. என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். என்னுடைய ஒவ்வொரு இசை ஆல்பத்தையும் கேட்டு கருத்து சொல்வார். எனது வளர்ச்சிக்கு அவை பயன்படுகின்றன. ரஜினிதான் எனது ‘காட்பாதர்'. அவர் எனக்கு அளிக்கும் ஊக்கத்தால்தான் முன்னேறுகிறேன்," என்றார்.
Post a Comment