ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தொடங்கியது.
ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை நிகழ்த்திய படம் பாகுபலி. தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக வெளியாகி ரூ 600 கோடி வசூலைக் குவித்தது. ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்திய சினிமா வரலாற்றில் தனி இடம் பிடித்த பாகுபலி, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பிரபாஸ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியைப் படமாக்கி வருகிறார்கள்.
இந்த இரண்டாம் பாகத்தில்தான் பாகுபலி ஏன் கொல்லப்பட்டார், அனுஷ்கா ஏன் சிறைப்பிடிக்கப்பட்டார் போன்ற முடிச்சுகள் அவிழ இருக்கின்றன.
வரும் 2016 அக்டோபருக்குள் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment