நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரச்சாரத்தில் இன்னும் வேகமெடுத்திருக்கிறது விஷால் அணி.
திரையுலகின் அத்தனைப் பிரபலங்களையும் அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
நேற்று முன்தினம் ஆச்சி மனோரமாவைச் சந்தித்தவர்கள், அடுத்து ரம்யா கிருஷ்ணனைச் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
நேற்று கவுண்டமணி, வடிவேலு, விவேக் என காமெடி உலகில் சிகரம் தொட்ட மூன்று கலைஞர்களையும் சந்தித்து வாக்குக் கேட்டனர். இவர்களில் வடிவேலுவும் விவேக்கும் தம்ப்ஸ் அப் என்பது போல சிம்பல் காட்டி ஆதரவை உறுதி செய்தனர்.
சில பல வதந்திகளை வென்று சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியிருக்கும் வினுச்சக்கரவர்த்தியையும் நேற்று சந்தித்து ஆதரவு கேட்டனர்.
தங்கள் அணியைச் சேர்ந்த வேட்பாளர்களில் ஒருவரான கார்த்தியின் தந்தைதான் என்றாலும், அவரையும் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
'இவர்களின் இந்த வேகத்தைப் பார்த்தால், இந்த அணிதான் நடிகர் சங்கத்தைக் கைப்பற்றும் போல' என்கிற ரீதியில் பேச்சு கிளம்பியிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
Post a Comment