ஆஸ்கர் போட்டி... ஒன்றரை நாள் விவாதத்தைக் கிளப்பிய காக்கா முட்டை!

|

ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகாவிட்டாலும், ஒன்றரை நாள் கடும் வாக்குவாதத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது காக்கா முட்டை.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் படங்களை நடிகர், இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான ஒரு குழு தேர்வு செய்தது.

Kakka Muttai causes for an one and half day debate

இதில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. தேர்வுக் குழுவில் நடந்தது எதுவும் சரியில்லை என்று கூறி உறுப்பினர் ராகுல் ரவைல் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். பாலேகருடனான கருத்துவேறுபாடு தொடர்பாகவே குழுவிலிருந்து விலகுவதாகக் கூறினார்.

இப்போது தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மற்றொரு இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில், கோர்ட் படத் தேர்வு தொடர்பான சில உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஆஸ்கர் தேர்வில் இடம்பெற்ற முறைகேடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஓட்டெடுப்பில் பல படிகள் இருந்தன. ஒரு இடைநிலை ஓட்டெடுப்பின்போது நான்கு படங்களின் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டன. அவை - மார்கரிட்டா வித் ஏ ஸ்டிரா, காக்கா முட்டை, மசான், கோர்ட்.

மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது தேர்வுக்குழுத் தலைவர் அமோல் பாலேகர் கொடுத்த முடிவு தவறு எனத் தெரிந்தது. கோர்ட் படத்தை அவர் வெளியேற்ற நினைத்தார். நானும் இயக்குநர் கமலேஷ்வர் முகர்ஜியும் கோர்ட் படத்துக்கு ஆதரவாகப் பேசினோம். அதிலிருந்து நிலைமை மாறியது.

எனக்கு காக்கா முட்டை படம் மீது எந்த வெறுப்பும் கிடையாது. கடைசியில், ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட்டா இல்லை காக்கா முட்டையா என ஒன்றரை நாள் விவாதித்தோம். இது மிகவும் கடினமான தேர்வுதான். கடைசியில் நாங்கள் எல்லோரும் ஒருமனதாக கோர்ட் படத்தைத் தேர்வு செய்தோம். நானும் பதவி விலகி இருந்தால் கோர்ட் படமே தேர்வாகியிருக்காது," என்றார்.

 

Post a Comment