இதுகுறித்து படத்தின் இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:இந்த கதை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அறிந்த ஒன்று. நானும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கும் தெரியும். மதுரை, கோவை, நெல்லை மாவட்டத்தின் பதிவுகளாக பல படங்கள் வந்து விட்டது. அதுபோன்று குமரி மாவட்டத்தின் சமீபத்திய வரலாற்றையும், மக்களின் வாழ்க்கை முறையும் பதிவு செய்யும் முயற்சிதான் இது. சுந்தரத்தின் கதையோடு குமரி மாவட்டத்தின் பிரச்னைகளும் மண்ணின் மணமும் சேர்ந்தே வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராயும் படம் அல்ல. அவரது வாழ்க்கையை சொல்லும்படம். அதில் நிஜ கேரக்டர்களை சொல்லாவிட்டால் டாக்குமென்டரி ஆகிவிடும். படத்தின் கேரக்டர்களில் பலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அஞ்சலி நடிக்கும் லூர்துமேரி கேரக்டர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரக்டர். யாரையும் இந்தப் படம் புண்படுத்தாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து படத்தை போட்டுக் காட்ட இருக்கிறோம். தற்போது இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. அது முடிந்ததும் படத்தை போட்டுக் காட்டுவோம்.
Post a Comment