தற்போது இயக்குனர்கள் ஹீரோவாகவும், ஹீரோ தயாரிப்பாளர்களாகவும் மாறி வருகின்றனர். ஆர்யாவை தொடர்ந்து விஷாலும் படம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கயிருக்கிறார். வழக்கமாய் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படங்கள் தயாரிக்க, நடிக்க மட்டுமே செய்து வந்த விஷால், திடீரென ஒரு லவ் த்ரில்லர் படமொன்றைத் தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் நாயகன் விஷால் இல்லை. நகுலன் மற்றும் மனோஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, விஷாலை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை இயக்கிய திரு இயக்குகிறார்.
Source: Dinakaran
Post a Comment