குறையும் வாய்ப்புகள் சோகத்தில் தமன்னா!
1/4/2011 3:00:15 PM
1/4/2011 3:00:15 PM
மைனா படத்தின் ஹிட் பிறகு உயரத்திற்கு வந்துள்ளார் அமலா பால். இப்போது கோலிவுட்டில் அவருக்குத்தான் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேபோல விஜய்யுடன் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் இணைந்துள்ள ஹன்சிகாவுக்கும் பெரும் கிராக்கியாகியுள்ளது. மேலும், அமலா மற்றும் ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க சற்றும் வெட்கப்படுவதோ, தயங்குவதோ கிடையாதாம். இதனால்தான் அவர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் அமலா பால் பிசியாகி வருகிறார். அவரைத் தேடி பிரபல நடிகர்களின் படங்களும் ஓடி வர ஆரம்பித்துள்ளன. இதனால் வருகிற வாய்ப்புகளை வளைத்துப் போட ஆரம்பித்துள்ளார் அமலா. இதனால் தமன்னாவிற்க தேடி வரும் சில பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். தனக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவைத் தேடி போனதால் அப்செட் ஆகி விட்டாராம் தமன்னா. இந்தப் போட்டியை சமாளிக்கவும், தனது நிலையை ஸ்திரமாக்கவும் அவர் சில திட்டங்களுடன் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Source: Dinakaran
Post a Comment