நல்ல கதை இல்லையா? வீட்டில் சும்மா இருக்கலாம்
1/4/2011 11:59:20 AM
1/4/2011 11:59:20 AM
'வல்லக்கோட்டைÕ படத்தில் நடித்த ஹரிபிரியா கூறியது: சேரன் நடிக்கும் ‘முரண்’ படத்தில் பேஷன் டிசைனராக நடிக்கிறேன். நடிப்புக்கு தீனி போடும் வேடம். இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இது நான் நடிக்கும் 3வது படம். தெலுங்கில் 'பில்லா ஜமீன்தார்Õ என்ற படத்தில் நடிக்கிறேன். கன்னட படத்தில்தான் எனது நடிப்பு வாழ்க்கை தொடங்கியது. ஆனால் இப்போது கைவசம் ஒரு கன்னட படம் கூட இல்லை. நான் கதையைத்தான் நம்புகிறேன். நல்ல கதைதான் அழகான திரைக்கதையாக அமையும். தமிழ், தெலுங்கு மொழிகளில் மாறுபட்ட கதை அம்சங்கள் வருகிறது. ஆனால்
கன்னடத்திலிருந்து அப்படிப்பட்ட கதை கொண்ட படங்கள் எனக்கு வரவில்லை. நிறைய பேர் கதை சொல்கிறார்கள். ஆனால் வித்தியாசமானது மட்டும்தான் எனது தேர்வு. ஸ்கிரிப்ட் சரியில்லாத படங்களில் நடிப்பதைவிட வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கலாம். அதனால் எனக்கு கவலை இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகளை கண்மூடித்தனமாகவும் ஒப்புக்கொள்வதில்லை. இவ்வாறு ஹரி பிரியா கூறினார்.

Source: Dinakaran
Post a Comment