வெளிநாட்டு தமிழர்களுக்காக இசை ஆல்பம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு தமிழர்களுக்காக இசை ஆல்பம்
1/5/2011 10:56:47 AM
'வம்சம்' படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். தற்போது 'போராளி', 'எத்தன்', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி', 'மல்லுக்கட்டு' உட்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதற்கிடையே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக, தமிழ் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.
தமிழ் மொழியின் பெருமை, தமிழ்நாட்டின் புகழ், தமிழ் மக்களின் ஒற்றுமை, உலக தமிழர்களின் ஏக்கம் இவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆல்பம் உருவாகி வருகிறது. இதற்கான பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, அனுராதா ஸ்ரீராம் உட்பட 15 முன்னணி பாடகர்கள் பாடி உள்ளனர். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதன் பணிகள் முடிந்ததும் இதன் வெளியீட்டு விழா, வெளிநாடு ஒன்றில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது என தாஜ்நூர் தெரிவித்தார்.


Source: Dinakaran
 

Post a Comment