ஹீரோ ஆனார் இயக்குனர் ராம்
1/5/2011 10:55:08 AM
ஒரு கெட்ட மகன், நல்ல அப்பா ஆன கதை. முக்கிய கேரக்டரில் நடிக்க 8 வயது சிறுமி தேவை. பல மாதங்கள் தேடி, கடைசியில் சென்னையை சேர்ந்த சாதனாவை தேர்வு செய்தேன். ஹீரோயின் மற்றும் இதர கேரக்டர்களில் நடிப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள். 18&ம் தேதி நாகர்கோயிலில் ஷூட்டிங் தொடங்குகிறது.
1/5/2011 10:55:08 AM
ஜீவா, அஞ்சலி நடித்த 'கற்றது தமிழ்' படத்தை இயக்கியவர் ராம். இப்போது 'தங்க மீன்கள்' படத்தை இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகிறார். போட்டோன் கதாஸ், ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரிக்கிறது. ஒளிப்பதிவு, அரபிந்த் சாரா. இசை, யுவன்சங்கர்ராஜா. பாடல்கள், நா.முத்துக்குமார். ஹீரோவாக நடிப்பது குறித்து ராம் கூறியதாவது:
டெல்லியிலுள்ள நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா கல்லூரியில், 40 நாட்கள் நடிப்புப் பயிற்சி பெற்றேன். பிறகு 'கற்றது தமிழ்' மூலம் இயக்குனரானேன். 'தங்க மீன்கள்' கதையை உருவாக்கியபோது, அதில் அமைந்த கேரக்டருக்கு நானும், என் தோற்றமும் பொருத்தமாக இருந்ததால் ஹீரோவாக நடிக்கிறேன்.ஒரு கெட்ட மகன், நல்ல அப்பா ஆன கதை. முக்கிய கேரக்டரில் நடிக்க 8 வயது சிறுமி தேவை. பல மாதங்கள் தேடி, கடைசியில் சென்னையை சேர்ந்த சாதனாவை தேர்வு செய்தேன். ஹீரோயின் மற்றும் இதர கேரக்டர்களில் நடிப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள். 18&ம் தேதி நாகர்கோயிலில் ஷூட்டிங் தொடங்குகிறது.
Source: Dinakaran
Post a Comment