மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'தா'
1/5/2011 10:59:07 AM
1/5/2011 10:59:07 AM
சமுத்திரக்கனி உதவியாளர் சூரியபிரபாகர் இயக்கிய படம் 'தா'. புதுமுகங்கள் ஸ்ரீஹரி, நிஷா நடித்திருந்தனர். ராஜேஷ் உத்தமன் தயாரித்த இந்த படம், கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. விமர்சகர்களின் பாராட்டைப்பெற்ற இந்த படம், சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் ஹிட்டாகவில்லை. இதையடுத்து இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். 'படம் பார்த்தவர்கள் புதிய காட்சிகளாக இருக்கிறது என்று பாராட்டினர். இதனால் அனைவரும் படத்தை பார்க்கும் பொருட்டு இம்மாத இறுதியில், படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறோம்' என்றார் இயக்குனர் சூரிய பிரபாகர்.
Source: Dinakaran
Post a Comment