தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
2/22/2011 2:59:01 PM
'நந்தா நந்திதாÕ பட இயக்குனர் ராம் ஷிவா கூறியது: ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் பெறுவது, தயாரிப்பாளருக்கு கதை சொல்லி ஒ.கே. பெறுவது போன்ற நடைமுறைதான் உள்ளது. இப்படத்திற்கு கதையை தயாரித்துக்கொண்டு பாடலாசிரியர்கள் வாலி, விவேகா, கபிலன், ஜெயந்தா ஆகியோரைத்தான் முதலில் சந்தித்தேன். அவர்கள் எழுதிய 6 பாடல்களை இசை அமைப்பாளர் எழில் இசையில் ஒலிப்பதிவு செய்து கொண்டேன். அதன்பிறகே தயாரிப்பாளரை தேடிப்பிடித்தேன். ஹேம சந்திரன் ஹீரோ, மேக்னா ஹீரோயின். இப்படத்துக்காக ஒகேனக்கல் அருகில் உள்ள தொல்லாக்காது என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்தது. 15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொட்டும் நீர் வீழ்ச்சியில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
Source: Dinakaran
Post a Comment