2/23/2011 10:32:45 AM
தமிழில் 'வெப்பம்', '180' படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நித்யா மேனன். அவர் கூறியதாவது: நடிகையானது எதிர்பார்த்தல்ல. சிறுவயது முதலே நடிக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைப்பேன். ஆனால், சூழ்நிலை என்னை ஹீரோயினாக்கி விட்டது. தெலுங்கில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தபோது, பூனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு படிக்க இருப்பதாக அந்த இயக்குனரிடம் சொன்னேன். ஆனால், அவர் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துவிட்டார். அந்த படம் ஹிட்டானது. எனக்கு கிளாமர், கமர்சியல் போன்ற விஷயங்களில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. மலையாள ரசிகர்களுக்கு என்னை ஆர்ட் படங்களில் நடிப்பவர் என்றுதான் தெரியும். அங்கு ஆர்ட் படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளேன். அதில் நடிக்கும்போது ஆத்ம திருப்தி இருப்பதாக உணர்கிறேன். சந்தோஷ் சிவன் இயக்கும் 'உருமி' படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ளேன். இளவரசி வேடம். '180' படத்தில் சித்தார்த்துடன் நடித்துள்ளேன். இந்த இரண்டு கேரக்டர்களும் பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
Post a Comment