3/14/2011 3:35:24 PM
பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ரெட்டி ஹீரோயின். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. கவர்ச்சி பாப் பாடகி சோஃபி சவுத்ரியை இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் பிரபு தேவா. இதில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளார். இது பற்றி சோஃபி கூறும்போது, 'Ôபிரபு தேவா இயக்கும் படத்துக்காக பாலிவுட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது நண்பரும் டிசைனருமான மனிஷ் மல்ஹோத்ரா, இப்படத்துக்காக எனக்கு காஸ்டியூம் வடிவமைத்திருக்கிறார். தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. கோலிவுட்டில் நல்ல கதைகளுடன் படங்கள் வெளி வருகின்றன. மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க ஆசை. நான் கமல் ரசிகை. ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரும் பிடிக்கும். அவர்களுடன் நடிக்க ஆசை. பிரபு தேவா படத்தில் நடிக்கும் பாடல் பற்றி விரிவாக இப்போது கூற முடியாது. தமிழில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது முழுமையாக நிறைவேறும் என்ற எதிர்பார்க்கிறேன்ÕÕ என்றார்.
Post a Comment