3/14/2011 3:31:43 PM
'சரோஜா’ படத்தில் நடித்த பின், சேரனுடன் 'முரண்Õ படத்தில் நடிக்கிறார் நிகிதா. அவர் கூறியது: சமீபத்தில்தான் எனது தந்தை இறந்தார். அந்த வேதனையில் இருக்கும்போது எனக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கும் திருமணம் என்று புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது மேலும் வேதனையாக இருந்தது. 'பிரின்ஸ்Õ என்ற படத்திற்காக அவருடன் திருமண காட்சியில் நடித்தேன். அதைத்தான் புரளியாக கிளப்பி இருக்கிறார்கள். இதே படத்தில் ஜெனிபர் கோட்வால் நடித்துள்ளார். மும்பையில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். ஆனால் ட்விட்டரில் என்னைப் பற்றி குறிப்பிடும்போது 'எனக்கு நிகிதா நண்பரல்லÕ என்று கூறி இருக்கிறார். 'பிரின்ஸ்Õ படத்தை சிறப்பு காட்சி திரையிட்டார்கள். எனது நடிப்பை நிறைய பேர் பாராட்டினர். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் இப்படி நடந்து கொள்கிறார். எனக்கு காதலன் யாரும் இல்லை. தர்ஷன் நல்ல நண்பர். சினிமாவில் 9 வருடமாக இருக்கிறேன். அதனால் புகழ் கிடைத்தது. இனிமேல் என் எதிர்கால வாழ்க்கையை யோசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. காதல் திருமணம், குடும்பத்தார் நடத்தி வைக்கும் திருமணம் என எதுவாக இருந்தாலும் ஓகேதான்.
Post a Comment