த்ரிஷாவின் மெகா ஆசை
3/15/2011 11:55:48 AM
விடுமுறை என்றால் த்ரிஷாவின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. பார்ட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது நண்பர்களுடன் கேம்ப் என விதவிதமாக அனுபவிப்பது அவரது வழக்கம். சமீபத்தில் தோழிகளுடன் ஜெய்ப்பூருக்கு சென்றார் த்ரிஷா. அங்குள்ள காட்டுப் பகுதிகளுக்கு சென்று விலங்குகளை பார்த்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என பூரிக்கிறார். த்ரிஷாவுக்கு ஒரு ஆசையாம், நடுக்காட்டில் உலவும் மெகா சைஸ் புலிகளைப் பார்க்க வேண்டுமாம். அதேபோல, நல்ல ஏற்ற இறக்கம் கொண்ட முரட்டு மலையில் ட்ரெக்கிங் போகவும் ஆசையாம்.
Source: Dinakaran
Post a Comment