3/15/2011 11:46:28 AM
காமெடி, காதல், சென்டிமென்ட் என்று கமர்ஷியல் பார்முலாவை வைத்து படங்களை தந்தவர் பூபதி பாண்டியன். தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்’, 'திருவிளையாடல் ஆரம்பம்’, விஷால் நடித்த 'மலைக்கோட்டை’ படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு கதை உருவாக்கினார். இந்த கதையை கேட்டு அதில் நடிக்க விருப்பம் தெரிவித்தார் விஷால். இயக்குனரும் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகளில் தீவிர ஈடுபட்டார். இதற்கிடையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. திடீரென்று தனது புதிய படத்தில் நடிக்க ஆர்யாவை தேர்வு செய்திருக்கிறார் பூபதி. விஷாலின் அண்ணியும் தயாரிப்பாளருமான நடிகை ஸ்ரேயா ரெட்டி இது பற்றி கருத்து தெரிவித்தபோது, 'பூபதி பாண்டியன் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. இதனால் அவரது இயக்கத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Post a Comment