‘வேலாயுதம்’ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்
3/14/2011 3:43:07 PM
வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 'வேலாயுதம்Õ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் டாம் டெல்மர் அமைக்கும் சண்டை காட்சியில் விரைவில் நடிக்க இருக்கிறார் விஜய்.
Source: Dinakaran
Post a Comment