சாட்டையில் பிளஸ் 2 மாணவி ஹீரோயின்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சாட்டையில் பிளஸ் 2 மாணவி ஹீரோயின்!

6/25/2011 11:03:47 AM

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ், தரணி இணைந்து தயாரிக்கும் படம், 'சாட்டை'. ஒளிப்பதிவு, ஜீவன். இசை, இமான். பாடல்கள், யுகபாரதி. படத்தை இயக்கும் எம்.அன்பழகன் கூறியதாவது: பள்ளி எப்படி இருக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாகிறது. ஆசிரியராக சமுத்திரக்கனி, உதவி தலைமை ஆசிரியராக தம்பி ராமய்யா, மாணவனாக யுவன், மாணவியாக மஹிமா நடிக்கின்றனர். அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த யதார்த்தமான மனிதர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஒர்க்ஷாப் மூலம் நடிப்பு மற்றும் வசனப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கதைக்குப் பொருத்தமான ஹீரோயினை தேடினோம். இறுதியில், கேரளாவை சேர்ந்த கோபிகா தேர்வு செய்யப்பட்டார். பிளஸ் டூ படித்து வரும் இவர், படத்திலும் பிளஸ் டூ மாணவியாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவரது பெயரை, மஹிமா என்று மாற்றியுள்ளோம்.




 

Post a Comment