6/4/2011 12:53:25 PM
மின்வெளி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை'. ஹேமச்சந்திரன், நந்தனா, சண்முகராஜன், அஜயன்பாலா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது 1950களில் தொடங்கி 1980ன் இறுதியில் முடியும் கதை. பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒரு மெல்லிய காதலோடு சொல்லியிருக்கிறேன். தொழிலாளர்கள் பற்றிய கதை என்றால், சம்பள உயர்வு, போனஸ் பிரச்னை, போராட்டம் என்றுதான் இதுவரை வெளியான படங்களில் காட்டியிருக்கிறார்கள். இது அதிலிருந்து வேறுபட்ட கதையாக இருக்கும். வழக்கமாக வில்லனாக நடிக்கும் சண்முகராஜன், இதில் காமெடி கலந்த கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். அந்த கால கட்டத்தை திரைக்குள் கொண்டுவர அதிக உழைப்பை செலவழித்திருக்கிறோம். இந்தப் படம் வெளியானால் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இந்த மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தனபால் பத்மநாபன் கூறினார்.
Post a Comment