ஆசின் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட சில நல்ல விஷயங்களையும் செய்து அதை மேனேஜ் செய்து விடுகிறார்.சமீபத்தில் தன்னிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருப்பவருக்கு, அவர் வீடு வாங்குவதற்காக ஆசின் ரூ. 4 லட்சம் பணம் கொடுத்து உதவினாராம்.
கடந்த ஐந்து வருடங்களாக அந்த உதவியாளர் ஆசினிடம் பணியாற்றி வருகிறார். சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிவு செய்த அவர், ஆசினிடம் தேவைப்பட்டால் உதவி கேட்கிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆசின், நிச்சயம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒரு வீட்டைப் பார்த்து முடித்த ஆசினின் உதவியாளர், அதை ஆசினிடம் சொல்லி உதவி கேட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக ரூ. 4 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து அவருக்கு உதவினாராம் ஆசின்.
இதுகுறித்து ஆசின் கூறுகையில், இதை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஏழைகளுக்கு என்னால் ஆன உதவிகளை நான் எப்போதும் செய்யத் தயங்கியது கிடையாது என்றார்.
ஆசினுக்கு நல்ல மனசுதான்!
Post a Comment