வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என மூன்று படங்களைக் கொடுத்துள்ள சுசீந்திரன் அடுத்து இயக்கப் போகும் படம்தான் ராஜபாட்டை.
விக்ரமை நாயகனாக வைத்து இதை உருவாக்குகிறார் சுசீந்திரன். தம்பி ராமையை முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். காதல், கலகலப்பு, அடிதடி என அனைத்தும் கலந்த மிக்ஸராக படத்தைக் கொடுக்கவிருக்கிறார் சுசீந்திரன்.
படத்தின் நாயகி தீக்ஷா சேத். தெலுங்கில் கலக்கி வரும் இவர் கவர்ச்சிக்குப் பெயர் போனவர். கவர்ச்சி காட்ட தயங்காதவர், கட்டழகான உடல் வாகு கொண்டவர்.
இப்படத்தில் ஜிம் வைத்து நடத்துபவராக வருகிறராம் விக்ரம். எனவேதான் அவருக்குத் தோதான ஜோடியாக இந்த கட்டழகியைப் பிடித்துப் போட்டுள்ளனர் போலும்.
படப்பிடிப்பை வருகிற 7ம்தேதி பூஜை போட்டுத் தொடங்கி சென்னையைச் சுற்றி எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.
Post a Comment