சந்தியாவின் திகில் அனுபவம்!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சந்தியாவின் திகில் அனுபவம்!

6/4/2011 12:54:59 PM

மலையாள படத்துக்காக நடுகாட்டில் இரண்டு வாரம் நடித்தது திகில் அனுபவமாக இருந்தது என்றார் சந்தியா. இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் 'த்ரீ கிங்ஸ்' படத்தில் நடித்து வருகிறேன். இந்திரஜித் ஜோடி. அடர்ந்த காடு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் ஷூட்டிங் நடந்தது. கேரளாவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே நடுகாட்டில் இரண்டு வாரங்கள் நடித்தது திகில் அனுபவம். காலையில் சீக்கிரம் சென்றுவிட்டு மாலையில் 4 மணிக்கு திரும்பி விட வேண்டும். இல்லை என்றால், காட்டு மிருகங்களிடம் சிக்க நேரிடும். யூனிட் ஆட்கள் இருந்தார்கள் என்றாலும் பயத்துடனேயே நடிக்க வேண்டியிருந்தது. இதில் நடித்தது எனக்கு திகில் அனுபவம். தமிழில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். எந்த கேரக்டரும் சவாலாக இல்லை. சுவாரஸ்யமான கதையும், கேரக்டரும் அமைந்தால் நடிப்பேன்.

 

Post a Comment