செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

|


சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டாக்டர் ஷில்பா திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் நடக்கிறது.

தற்போது தமிழகத்தில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் யார் என்றால் அது யுவன் தான். அவர் கடந்த 2005-ம் ஆண்டு சுஜாயா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். ஆனால் காதல் திருமணம் கசந்துபோய் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றக் கதவுகளைத் தட்டினர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது.

அதன் பிறகு யுவன் இசையிலேயே மூழ்கிவிட்டார். பின்னர் யுவனுக்கு மறுகல்யாணம் செய்ய வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினார். இந்நிலையில் யுவனுக்கு டாக்டர் ஷில்பா என்பவர் மீது காதல் வந்தது. இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 2-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
 

Post a Comment