ஒஸ்தியில் தீபிகா படுகோன், கேத்ரினா கைப் நடனம்!
8/24/2011 2:11:29 PM
சல்மான் கான், சோனாக்ஷி சின்கா நடித்து ஹிட்டான இந்தி படம் 'தபாங்'. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க, 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இப்போதே பிரமிப்பாக பேசுகின்றனர். ஒஸ்தி தொடக்க விழாவில் சல்மான்கானின் தம்பியும் , தபாங் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் கலந்து கொண்டார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எப்படியும் சல்மான்கானை பங்கு பெற செய்தாக வேண்டும் என விரும்புகிறாராம் சிம்பு. அதுமட்டுமின்றி படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனமாட கேத்ரினா கைப், தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
Post a Comment