''என்ன மரியாதை, என்ன மரியாதை'': மோகன்லால் பற்றி ஷாருக்கான் புளகாங்கிதம்!

|


கேரளாவில் ரிசார்ட் ஒன்றை திறந்து வைக்கச் சென்ற ஷாருக் கானுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஊர் சுற்றிக் காட்டி, ஷாருக் மனதில் இடம் பிடித்து விட்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ரிசார்ட் திறந்து வைப்பதற்காக கேரளாவுக்கு சென்றார். கொல்லத்தில் ரவீஸ் ரிசார்ட்டை தனது கைகளால் திறந்து வைத்த ஷாருக் உடனே மும்பைக்கு பறந்துவிடவில்லை. மாறாக கொல்லத்தை சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஊர் சுற்றிக் காட்டியது யார் தெரியுமா? சூப்பர் ஸ்டார் மோகன் லால் தான்.

இது குறித்து ஷாருக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

தி கிரேட் மோகன்லால்ஜி. என்ன ஒரு தன்னடக்கம், அடடா. உற்சாகமாக எனக்கு கொல்லத்தை சுற்றிக் காட்டினார். கொல்லம் ரவீஸ் ரிசார்ட்டுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். அழகிய ரிசார்ட். என்னைப் பார்த்தவுடன் மக்கள் சந்தோஷமாக கையசைத்தனர் என்று அதில் கூறியுள்ளார்.

ஷாருக் மோகன் லாலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவையும், ஒரு பாலத்தில் இருந்து ரசிகர்கள் அவரைப் பார்த்து கையசைக்கும் போட்டோவையும் டுவிட்டரில் போட்டுள்ளார் ஷாருக்.
 

Post a Comment