90 வயது மூதாட்டியை தீயில் இருந்து காப்பாற்றிய டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்

|


லண்டன்: தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து 90 வயது மூதாட்டியை டைட்டானிக் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் காப்பாற்றினார்.

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட்(35). இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(61). அவருக்கு நெக்கர் தீவில் சொகுசு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் விடுமுறையைக் கழிக்க கேட், அவரது காதலர் லூயி டவ்லர், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் தங்கினர்.

அந்த சொகுசு மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்தில் பிரான்சன் தன் மனைவி மற்றும் மகன் சாமுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கேட் தங்கியிருந்த மாளிகையை மின்னல் தாக்கியதால திடீர் என்று தீ பிடித்தது. உடனே மாளிகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

அப்போது அங்கிருந்து பிரான்சனின் 90 வயது தாயை கேட் லாவகமாகத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

இது குறித்து பிரான்சன் கூறுகையில்,

நான் கேட் வின்ஸ்லெட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தான் எனது தாயை மாளிகையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். என் தாய்க்கு 90 வயது ஆகிறது. அவரால் நடக்க முடியும். இருப்பினும் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் கேட் அவரை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார் என்றார்.

எரிந்து போன அந்த மாளிகையை பிரான்சன் தன் 28-வது வயதில் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 162-க்கு வாங்கினார். விரைவில் மாளிகையைப் புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த பிரான்சன் தான் வெர்ஜின் குரூப்பின் தலைவர் ஆவார்.
 

Post a Comment