செப்.1ம் தேதி திருப்பதியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மறுமணம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செப்.1ம் தேதி திருப்பதியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மறுமணம்!

8/24/2011 10:46:07 AM

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது காதலியை மறுமணம் செய்கிறார். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது காதலியான லண்டனைச் சேர்ந்த சுஜாயாவை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2008-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வந்த யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது வீட்டில் பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில், சமீபகாலமாக ஷில்பா என்பவரை காதலித்து வந்தார் யுவன் சங்க ராஜா. ஷில்பா, டாக்டர். இவர்கள் காதலுக்கு இருவரது குடும்பமும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திருப்பதியில் திருமணம் நடக்கிறது. இதில் இரண்டு குடும்பத்தையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள புதிய ஓட்டல் ஒன்றில் செப்டம்பர் 2ம் தேதி நடக்கிறது.

 

Post a Comment