8/24/2011 2:09:32 PM
தமிழில் 'காதல் அழிவதில்லைÕ படத்தை தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தெலுங்கிற்கு சென்றார் சார்மி. முன்னணி பட்டியலில் இருந்தவர் அனுஷ்கா, இலியானா, தமன்னாவின் ஆதிக்கத்தால் மார்க்கெட் இழந்தார். இரண்டாம் கட்ட கதாநாயகியாக தள்ளப்பட்டவருக்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்பு வந்தது. 'புட்டா ஹோகா தேரா பாப்Õ படத்தில் நடித்தார் சார்மி. இதே படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் சோனு சூட். இருவரும் படத்தில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் ஷூட்டிங்கில் மனம்விட்டு பேசி, நட்பை வளர்த்துக்கொண்டனர். அந்த நட்பு இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் சல்மான் கானுடன் 'தபங்Õ படத்தில் நடித்ததன் மூலம் அங்கு பிரபலம் ஆகி இருக்கும் சோனு சூட், தமிழில் 'ராணாÕ, 'ஒஸ்திÕ படங்களில் நடிக்கிறார். பாலிவுட்டில் சார்மிக்கு சான்ஸ் வாங்கித் தரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். தெரிந்த இயக்குனர்கள், நண்பர்களிடம் சார்மிக்கு ஹீரோயின் வேடம் தரும்படி சிபாரிசு செய்கிறாராம். சார்மியுடனான நட்பு பற்றி சோனுவிடம் கேட்டபோது, '’படங்களில்தான் வில்லனாக நடிக்கிறேன். நிஜத்தில் குடும்ப பாசம் உடையவன். திரையுலகில் எல்லாரிடமும் நட்புடன் பழகுகிறேன்” என்றார்.
Post a Comment