எஸ்வி சேகர் மகன் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!

|


நடிகர் எஸ்வி சேகரின் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமணம் இன்று சென்னையில் நடந்தது. திரையுலக - அரசியல் பிரமுகர்கள் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் எஸ்.வி. சேகர் மகன் அஸ்வின் சேகர். இவர் 'வேகம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நினைவில் நின்றவள், மணல் கயிறு -2 படங்களில் நடித்து வருகிறார்.

அஸ்வினுக்கும் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜி.எஸ். வெங்கட்ராமன் மகள் ஸ்ருதிக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அஸ்வின்-ஸ்ருதி திருமணம் இன்று காலை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
 

Post a Comment