'ரெபெல்': தமன்னா உள்ளே, அனுஷ்கா வெளியே!

|


தெலுங்கு படமான ரெபெல்லில் 'உயர அழகி' அனுஷ்காவை ஓரங்கட்டிவிட்டு பிரபாஸுடன் ஜோடி சேர்ந்துள்ளார் 'ஒல்லி அழகி' தமன்னா.

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெலுங்கில் ரெபெல் என்ற படத்தை எடுக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகினார். முதலில் ஓகே சொன்னவர் ராகவா லாரன்ஸுடன் ஏற்பட்ட லடாயால் வாக் அவுட் செய்துவிட்டார். ஏற்கனவே அனுஷ்கா காஞ்சனா படத்தில் நடிக்கவும் மறுத்துவிட்டவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் 'அஜால் குஜால்' லக்ஷ்மி ராயை படத்தில் சேர்த்தார் லாரன்ஸ்.

இந்த நிலையில், ரெபெல் படத்திற்கு நாயகியாக வந்து சேர்ந்துள்ளார் தமன்னா. கார்த்தி கல்யாணத்திற்குப் பிறகு தமன்னாவை அதிகம் தமிழில் காண முடியவில்லை. தமிழில் படங்கள் இல்லாமல் ஆந்திரக் கரையிலேயே இருக்கும் தமன்னாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். ரெபெல் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல நடிகர்பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்.

வரும் 15-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. படக்குழுவினர் விரைவில் பாங்காக் பறக்கவிருக்கின்றனர்.

இந்த படத்தில் தீக்ஷா சேத் இரண்டாவது கதாநாயகியாக வருகிறார். படத்திற்கு இசை எஸ். எஸ். தமன். ஸ்ரீ பாலாஜி சினி ஆர்ட்ஸ் மீடியாவைச் சேர்ந்த ஜே பகவான், ஜே புல்லா ராவ் தான் தயாரிப்பாளர்கள்.
 

Post a Comment