9/12/2011 9:55:58 AM
தனது டூயட் மூவீஸ் சார்பாக, பிரகாஷ் ராஜ் இயக்கி தயாரிக்கும் படம், 'டோனி'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் த.செ.ஞானவேல். நா.முத்துக்குமார் பாடல்கள். பிரகாஷ் ராஜ் ஜோடியாக முக்தா கோட்ஸே நடிக்கிறார். படம் பற்றி பிரகாஷ் ராஜ் கூறும்போது, ''இன்னொரு நல்ல படத்தை கொடுக்கும் முயற்சியில் இந்த படத்தை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு படத்தை தயாரித்து இயக்கி நடிக்கும்போது சந்தோஷம் மூன்று மடங்காகிறது. அதே நேரம் பொறுப்பும் மூன்று மடங்காகிறது. கபில்தேவுக்கு பிறகு நமக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டன் 'டோனி'யின் பெயரை படத்துக்கு வைத்துள்ளோம்'' என்றார். குழந்தைகளின் உளவியல் பற்றிய கதையான இது டிசம்பரில் வெளியாகிறது.
Post a Comment