தமிழில் டான் 2

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், 'டான்'. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 1978ல் வெளியான 'டான்' படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் 'டான் 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜேசன் வெஸ்ட். வரும் 23ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. 'டான்' படத்தில் நடித்தவர்களில் அர்ஜுன் ராம்பால், இஷா கோபிகருக்குப் பதிலாக, இதில் லாரா தத்தாவும் குணால் கபூரும் நடித்துள்ளனர்.


 

Post a Comment