ஸ்ரீலஷ்மி பிரசன்னா பிக்சர்ஸ் வழங்க, மஞ்சு என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகன்பாபு மகள் லஷ்மி மஞ்சு தமிழ், தெலுங்கில் படம் தயாரிக்கிறார். அவரது தம்பி மனோஜ் ஹீரோ. தீக்ஷா சேத் ஹீரோயின். மற்றும் பிரபு, சுஹாசினி, பாண்டியராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். இசை, போபோ சாசி. வசனம், சோழன். சேகர்ராஜா இயக்குகிறார். சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபு, நிருபர்களிடம் கூறும்போது, ''இந்தப் படத்தில் அப்பா சிவாஜியும் வருகிறார் என்றார்கள். எப்படி என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இது 4 தலைமுறைகள் கதை. என்.டி.ராமராவ், சிவாஜி, பாலகிருஷ்ணா என யாருமே எதிர்பாராத ஆச்சரியங்கள் படத்தில் இருப்பதாக டைரக்டர் சொன்னார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை'' என்றார். பேட்டியின்போது, மனோஜ், லஷ்மி மஞ்சு, ஆதி உட்பட பலர் இருந்தனர்.
Post a Comment