பிபாஷா பாஷுவை காதலிக்கவில்லை என்று தெலுங்கு நடிகர் ராணா கூறினார். தெலுங்கு நடிகர் ராணாவும் இந்தி நடிகை பிபாஷா பாஷுவும் 'தம் மாரோ தம்' படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து இவர்களுக்குள் காதல் என்று பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, வெற்றிமாறன் இயக்கும் இருக்கும் 'வடசென்னை' படம் மூலம் தமிழுக்கு வரும் ராணா, தனது காதல் பற்றி கூறியதாவது: ஹீரோயின்களுடன் இணைத்து பேசுவது சினிமாவில் ஒன்றும் புதிதில்லை. பிபாஷூவும் நானும் பிரண்ட்ஸ்தான். 'தம் மாரோ தம்' பட யூனிட்டில் பணியாற்றிய எல்லோருமே எனக்கு குடும்பம் மாதிரிதான். அப்படித்தான் பிபாஷாவும். மற்றபடி மீடியாதான் இதை காதல் என்று பெரிது படுத்துகிறது. தெலுங்கு, இந்தி படங்களைத் தொடர்ந்து இப்போது தமிழில் நடிக்க இருக்கிறேன். தமிழில் எப்போதோ நடித்திருக்க வேண்டியது. இந்திப் படம் கமிட் ஆகிவிட்டதால் தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் நல்ல ஸ்கிரிப்டுக்காக, காத்திருந்தேன். தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் சொன்ன கதைப் பிடித்திருந்தது. இதில் சிம்பு ஹீரோ. எனது கேரக்டர் சிறியதா, பெரியதா என்பது பற்றி கவலையில்லை. ஆனால், சிறப்பான, ஸ்ட்ராங்கான கேரக்டர் என்பதை சொல்ல முடியும். இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்படலாம்.
Post a Comment