ஜெனிலியாவுக்கு தடையே போட மாட்டேன்..ரித்தேஷ்

|


திருணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க நான் தடைபோட மாட்டேன் என்று அவரது வருங்கால கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

நடிகை ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்நிலையில் ஜெனிலியா திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஜெனிலியா நடிக்க தான் தடைபோடப்போவதில்லை என்று ரித்தேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு துஜே மேரி கசம் என்ற படத்தில் சந்தித்து காதலில் விழுந்த ஜெனிலியா, ரித்தேஷ் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தேரே நால் லவ் ஹோ கயா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் பிப்பரவரி 24ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ரித்தேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திருமணத்திற்குப் பிறகு ஜெனிலியா நடிக்க நான் தடைபோட மாட்டேன். அது அவரது விருப்பம். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை. எங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருப்பதால் தான் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுகிறேன். இல்லையென்றால் தனிப்பட்ட விஷயங்களை பொது இடங்களில் பேச விரும்பாதவன் நான்.

நானும், ஜெனிலியாவும் ஜோடி சேர்ந்துள்ள தேரே நால் லவ் ஹோ கயா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறேன். பிப்பரவரி மாதம் நடக்கும் நட்சத்திர கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடுகிறேன். ஹவுஸ்புல் 2 படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
 

Post a Comment