விஸ்வரூபம் பட தலைப்புக்கு திடீர் எதிர்ப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமலின் 'விஸ்வரூபம் பட தலைப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் படங்களின் தலைப்புக்கு அவ்வப்போது சர்ச்சை எழுவது வழக்கம். 'சண்டியர் என்ற பெயர் வைத்தபோது அதை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இதையடுத்து 'விரும £ண்டி என பெயர் மாற்றப்பட்டது. 'வசூல் ராஜா எம்பிபிஎஸ் தலைப்பு வைத்தபோது டாக்டர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்போது 'விஸ்வரூபம் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் இது குறித்து கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கண்ணன் கூறி உள்ளார்.


 

+ comments + 2 comments

23 June 2012 at 17:26

தம்பி விஸ்வரூபம் னு பழய படம் ஒன்னு இருக்குது சிவாஜி நடிச்சது அதுக்கு நீங்க எதிர்ப்பு தெரிவிக்கல ?

saravana
23 June 2012 at 23:08

புதிய ரூபம் காட்டப்போகிறார் கமல் ஏன் தடுக்கிறாங்க

Post a Comment