'ஷேர் ராக்கெட்' : செந்திலின் அதிரடி 'தில்லுமுல்லு'!

|

Vasanth Tv Comedy Seriyal Thillu Mu

ரியல் எஸ்டேட் விற்பனை வந்தாலும் வந்தது அதை வைத்து காமெடி செய்பவர்கள் அதிகரித்து விட்டனர். பத்திரிக்கைகளில் ரியல் எஸ்டேட் காமெடி பக்கம் பக்கமாக வர ஆரம்பித்து விட்டது. இதனிடையே புது சீரியல் மூலம் ரியல் எஸ்டேட் பிஸினசை பிரித்து மேய களம் இறங்கியுள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்.

வசந்த் தொலைக்காட்சியில் திங்கட்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடித் தொடர் தில்லுமுல்லு. நடிகர் செந்தில் நடிக்கும் இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிஸினஸ் மூலம் ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுபவராக வருகிறார் நடிகர் செந்தில்.

இந்த வாரம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவராக வரும் செந்தில், நகர நெருக்கடியில் வீடு வாங்க பிரியப்படாத ஒருவரிடம் `சந்திரமண்டலத்தில் 2 கிரவுண்டை வாங்கிப் போடுங்கள்' என்கிறார். `சந்திர மண்டலத்திலா?' என்று அதிர்ந்து போகும் அந்த நபரிடம், `எப்படி பூமிக்கு வந்து போவது என்ற பயத்தில் தானே இப்படி கேட்கிறீர்கள். இங்கே சென்னையில் தெருவுக்கு தெரு ஷேர்ஆட்டோ ஓடுவது போல் சந்திரனில் இருந்து அடிக்கடி சென்னைக்கு `ஷேர் ராக்கெட்' வரப்போகிறது. அதில் வந்து சென்னை கோயம்பேட்டில் காய்கறி வாங்கி விட்டு திரும்பிப் போகலாம். எனவே போக்குவரத்து பிரச்சினை இல்லை, என்று நம்ப வைக்கிறார். எப்போதுமே பரபரப்பான தி.நகரில் இடம் கேட்பவருக்கு பக்கத்தில் உள்ள பனகல் பூங்காவை பத்திரம் எழுதி கொடுக்கிறார்.

இந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் அவரை எங்கே கொண்டு போகிறது என்பதை நகைச்சுவைக் காட்சிகளுடன் இயக்கி இருக்கிறார், ஜெயமணி. செந்திலின் தில்லு முல்லு ரசிகர்களை ரசிக்கவைக்கத்தான் செய்கிறது

 

Post a Comment