ஆன்மீகத்தில் மூழ்கினார் மனீஷா

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேதனை அடைந்தார். கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதால் உடனடியாக அந்த தகவலை டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றியதுடன் கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும் மும்பை திரும்பிய அவர் சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்ததுடன் குடித்துவிட்டு தன்னிலை மறக்கத் தொடங்கினார். தள்ளாடியபடி அவர் நள்ளிரவு பார்ட்டியிலிருந்து வெளியேறிய காட்சிகளை படம் பிடித்து மும்பை பத்திரிகை, இணை தளங்களில் வெளியானது. மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற மனிஷாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறினார். மேலும் திரையுலக நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கோயில் வளாகத்திற்குள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்கிறார். சென்னையில் உள்ள பிரபல தியான மையத்திற்கும் அடிக்கடி வருகிறார். ஆன்மிக வகுப்பிலும் அவர் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். இப்போது தன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறாராம்.


 

Post a Comment