ரஜினியின் சிவாஜி - தி பாஸ்... விரைவில் 3டி தொழில்நுட்பத்தில்!

|

Sivaji The Boss Be Released 3d   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி வசூல் படம் 'சிவாஜி - தி பாஸ்' இப்போது 3 டியில் வெளியாகவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படம் சிவாஜி. சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டையும் இந்தப் படம் உருவாக்கிக் கொடுத்தது.

2007-ல் வெளியாகி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த சிவாஜியை 3டிக்கு இப்போது மாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி, பலவித கெட்டப்புகளில் தோன்றினார். ஸ்ரேயா ஜோடியாக நடித்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது.

பணக்காரர்கள் பதுக்கி வைத்த பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை மீட்பதுதான் இப்படத்தின் கதை.

கோச்சடையான் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்பு 3டி சிவாஜி வெளியாகிவிடும் என்கிறார்கள், ஸ்டுடியோ வட்டாரங்களில்.

 

Post a Comment