ரௌத்திரம் படத்தால் நஷ்டம் - ஜீவாவிடம் ரூ 65 லட்சம் கேட்கும் தியேட்டர்காரர்கள்!

|

Exhibitors Threat Jeeva Compensatio   

கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து நஷ்ட ஈடு சர்ச்சை மீண்டும் கேட்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கத்தில்.

இந்த முறை ஜீவா பட நஷ்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜீவா-ஸ்ரேயா ஜோடியாக நடித்த ரௌத்திரம் படம் கடந்த வருடம் ரிலீசானது. தெலுங்கிலும் படத்தை வெளியிட்டனர். ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை தயாரித்திருந்தார். இரு மொழிகளிலுமே படம் தோல்வியடைந்தது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் நடிகர் ஜீவா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்கிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, "ரௌத்திரம் படத்துக்கு நஷ்ட ஈடு தர சம்மதித்தனர். ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை. எனவே ஜீவா படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்," என்றனர்.

ஜீவா தற்போது 'முகமூடி', நீதானே என் பொன் வசந்தம் படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பன்னீர் செல்வம் கூறும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான். இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட முடிவை எடுப்போம் என்றார்.

ஆனால் யாருக்கும் நஷ்டஈடு தரும் எண்ணமில்லை என்று ஆர் பி சவுத்ரி அறிவித்துள்ளார்.

 

Post a Comment