ஆகஸ்ட் 29 முதல் கேப்டன் செய்திச் சேனல் தொடக்கம்!

|

Vijaykant Captain News Launch 29th August

கேப்டன் மீடியா நிறுவனத்தில் இருந்து 24 மணி நேர செய்திச் சேனல் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் à®'ளிபரப்பாக உள்ளது. இதற்கான சோதனை à®'ளிபரப்பு பணிகள் முடிவடைந்துள்ளதை அடுத்து முழுநேர செய்திச்சேனல் à®'ளிபரப்பினை தொடங்க உள்ளதாக கேப்டன் மீடியா நிறுவன இயக்குநர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் பிறந்த நாளான இன்றுதான் செய்திச் சேனலை தொடங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். இப்போது நான்கு தினங்கள் தள்ளி ஆரம்பிக்கின்றனர்.

தமிழில் ஏற்கனவே சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ், ராஜ் செய்திகள், புதிய தலைமுறை, சத்தியம், ஜி நியூஸ் போன்ற செய்திச்சேனல்கள் à®'ளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் இப்பொழுது கேப்டன் செய்திகளும் இணைகிறது.

அவரவர் நிலைப்பாட்டுக்கேற்ப செய்திகளைச் சொல்லும் சேனல்களாகவே இவற்றில் பெரும்பாலானவை உள்ளன.

செய்திகளை உண்மையா தெரிஞ்சிக்க à®'ரு சேனல் எப்போ வருமோ என்பதுதான் பார்வையாளர் கேள்வி!!

 

Post a Comment