விஜய்யின் துப்பாக்கி தலைப்புக்கு ஆறாவது முறையாக தடை நீட்டிப்பு!!

|

Interim Stay On Thuppakki Extended Till Sep 20

சென்னை: விஜய் நடித்துவரும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு ஆறாவது முறையாக நீதிமன்றம் தடையை நீட்டித்துள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. ஆரம்பத்தில் இந்தப் படம் தலைப்பில்லாமல்தான் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில்தான் துப்பாக்கி என்ற தலைப்பும், அதன் டிஸைனும் வெளியிடப்பட்டது.

இந்த தலைப்புக்கும் டிசைனுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்துவரும் நார்த் இஸ்ட் பிலிம் à®"ர்க்ஸ் நிறுவனம் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் 2-ல் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்தத் தடை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து வழக்கை செப்டம்பர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கும் என உத்தரவிட்டார்.

தொடரும் தடை காரணமாக, துப்பாக்கி படத்தின் டிசைன்கள் மற்றும் பாடல் வெளியீடு தாமதமாகி வருகிறது.

 

Post a Comment