சென்னை:
ஆனால் கமலோ, இன்னும் பட வெளியீடு குறித்து எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறார். ரம்ஜான் ஸ்பெஷலாக இந்தப் படம் வரும் என்று கூறப்பட்டது.
ஆனால் ரம்ஜான் கடந்த நிலையிலும் அதுபற்றிய செய்தியில்லை.
இந்த நிலையில் படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
பூஜாகுமார், ஆன்ட்ரியா உள்பட மூன்று நாயகிகள் நடித்துள்ள இந்தப் படம் அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஜூலையில் ட்ரைலர் வெளியானபோதே படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்கள். அதற்கேற்ப இரு சர்வதேச திரை விழாக்களிலும் படத்தின் முக்கிய காட்சிகள் காட்டப்பட்டன.
வரும் அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்று இப்போது தெரியவந்துள்ளது.